செய்திகள்

ஆஷஸ் தொடரிலிருந்து ஆண்டர்சன் விலகல்!

எழில்

ஆஷஸ் டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன் விலகியுள்ளார். 

தன்னுடைய உடற்தகுதியை நிரூபிப்பதற்காக உள்ளூர் ஆட்டத்தில் விளையாடியபோது ஆண்டர்சனுக்குக் கெண்டைக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஆஷஸ் தொடரிலிருந்து அவர் விலகியுள்ளார்.

முதல் டெஸ்டில் விளையாடிய ஆண்டர்சன், நான்கு ஓவர்கள் மட்டுமே பந்துவீசினார். கெண்டைக்காலில் வலி ஏற்பட்டதால் ஆட்டத்திலிருந்து விலகினார். அதன்பிறகு நடைபெற்ற ஆஷஸ் ஆட்டங்களில் அவரால் இடம்பெறமுடியாமல் போனது. இப்போது காயம் காரணமாக கடைசி இரு டெஸ்டுகளிலும் கூட அவரால் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. 

காயங்கள் காரணமாக ஆண்டர்சன் தொடர்ந்து விளையாடுவது சந்தேகமாக இருக்கிறது. இரு வருடங்கள் கழித்து நடைபெறும் அடுத்த ஆஷஸ் போட்டியில் அவர் இடம்பெறுவதும் சந்தேகம் என்றே கூறப்படுகிறது. எனினும் தற்போது 575 விக்கெட்டுகள் எடுத்துள்ள ஆண்டர்சன், 600 விக்கெட்டுகள் எடுத்த முதல் வேகப்பந்துவீச்சாளர் என்கிற பெருமையை அடைய அடுத்ததாக நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கச் சுற்றுப்பயணங்களில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆண்டர்சனுக்குப் பதிலாக கிரைக் ஓவர்டன் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT