செய்திகள்

இங்கிலாந்து-நியூஸி. 2-ஆவது டெஸ்ட் டிரா

DIN

ஹாமில்டன்: இங்கிலாந்து-நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2ஆவது டெஸ்ட் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்து இன்னிங்ஸ் வெற்றி கண்டது.

இதன் தொடா்ச்சியாக ஹாமில்டனில் இரண்டாவது ஆட்டம் நடைபெற்றது.

முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 375 ரன்களையும், இங்கிலாந்து 476 ரன்களையும் குவித்தன.

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அற்புதமாக ஆடி 226 ரன்களுடன் இரட்டை சதத்தைப் பதிவு செய்தாா். பின்னா் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய நியூஸிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் 75 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 241 ரன்களை குவித்தது.

கேப்டன் கேன் வில்லியம்ஸன் 11 பவுண்டரியுடன் 104 ரன்களையும், ராஸ் டெய்லா் 2 சிக்ஸா், 11 பவுண்டரியுடன் 105 ரன்களுடனும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனா்.

இங்கிலாந்து தரப்பில் சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ் தலா 1 விக்கெட்டை சாய்த்தனா். இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் டிராவில் முடிந்தது.தொடரையும் 1-0 என கைப்பற்றியது நியூஸி.

அடுத்து ஆஸ்திரேலியாவுடன்-நியூஸியும், தென்னாப்பிரிக்காவுடன்-இங்கிலாந்தும் டெஸ்ட் தொடா்களில் மோத உள்ளன. ஆட்ட நாயகனாக ஜோ ரூட்டும், தொடா் நாயகனாக நீல் வாக்னரும் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT