முகப்பு
செய்திகள்

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி இரண்டு பகலிரவு டெஸ்டுகளில் விளையாட வேண்டும்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா கோரிக்கை!

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் கோரிக்கையை பிசிசிஐ ஏற்றுக்கொண்டால், இரு பகலிரவு டெஸ்டுகள் நடைபெறும் முதல் டெஸ்ட் தொடர் என்கிற பெருமையும் இதற்குக் கிடைக்கும். 

Updated On : 6 டிசம்பர், 2019 at 10:53 AM
பகிர்:

2021-ல் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்கிறது. இதில் இந்திய அணி இரு பகலிரவு டெஸ்ட் ஆட்டங்களில் விளையாட வேண்டும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா கோரிக்கை விடுத்துள்ளது.

அடிலெய்ட், பிரிஸ்பேன், பெர்த் ஆகிய மைதானங்களில் ஏதேனும் இரண்டு இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் முதல் இரு டெஸ்டுகளை நடத்தும். அந்த இரண்டிலும் பகலிரவு டெஸ்ட் ஆட்டங்களை நடத்த வேண்டும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐயுடன் ஜனவரியில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. 

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் கோரிக்கையை பிசிசிஐ ஏற்றுக்கொண்டால், இரு பகலிரவு டெஸ்டுகள் நடைபெறும் முதல் டெஸ்ட் தொடர் என்கிற பெருமையும் இதற்குக் கிடைக்கும். 

Advertisement

சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் இன்னிங்ஸ் வெற்றியை அடைந்தது இந்திய அணி. இதையடுத்து இந்தியாவில் இனி நடைபெறும் டெஸ்ட் தொடர்களில் பகலிரவு டெஸ்ட் ஆட்டம் கட்டாயம் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்திருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.