செய்திகள்

செய்திகள் சில வரிகளில்...

DIN

    இந்தோனேஷியாவின் சுரபயா நகரில் நடைபெற்று வரும் 15 வயதுக்குட்பட்ட ஆசிய ஜூனியர் பாட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் தஸ்னிம் மிர், தாரா ஷா ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இருவரும் மோத உள்ளனர்.
    பிசிசிஐ தலைவர் செüரவ் கங்குலி மீது தான் மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன். அவருக்கும் எனக்கும், இடையே எந்த கருத்து வேறுபாடும் கிடையாது என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
    குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக அஸ்ஸôம் மாநிலத்தில் தொடர்ந்து போராட்டம் நடந்து வரும் நிலையில், குவஹாட்டியில் வரும் ஜனவரி மாதம் 5-ஆம் தேதி இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதல் டி20 ஆட்டம் நடைபெறுமா என கேள்விக்குறி எழுந்துள்ளது.
    கல்யாணியில் சனிக்கிழமை நடைபெற்ற ஐ லீக் கால்பந்து போட்டியின் ஆட்டம் ஒன்றில் பலம் வாய்ந்த ஈஸ்ட்பெங்கால் அணி 2-1 என்ற கோல் கணக்கில் புதுமுக அணியான டிராவ் எஃப்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT