கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களாக இருப்பது பெரிய பலனை அளிக்காது, பேட்ஸ்மேன்களுக்குத் தான் அதிக வருமானமும் அதிக ரசிகர்களும் கிடைப்பார்கள் எனச் சொல்வதுண்டு. ஆனால் நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் பந்துவீச்சாளர்கள் தான் அதிக விலைக்குத் தேர்வாகியுள்ளார்கள்.
நேற்றைய ஏலத்தில் அதிக விலைக்குத் தேர்வான வீரர்களில் ஹெட்மையர் தவிர அனைவருமே பந்துவீச்சாளர்கள் & ஆல்ரவுண்டர்கள்.
ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்குத் தேர்வான வீரர்கள்
ரூ. 15.50 கோடி: கம்மின்ஸ் - பந்துவீச்சாளர்
ரூ. 10.75 கோடி: மேக்ஸ்வெல் - பேட்டிங் அல்ரவுண்டர்
ரூ. 10.00 கோடி: கிறிஸ் மாரிஸ்: பந்துவீச்சாளர் ஆல்ரவுண்டர்
ரூ. 8.50 கோடி: காட்ரெல் - பந்துவீச்சாளர்
ரூ. 8.00 கோடி: நாதன் கோல்டர் நைல் - பந்துவீச்சாளர் ஆல்ரவுண்டர்
ரூ. 7.75 கோடி: ஹெட்மையர் - பேட்ஸ்மேன்
ரூ. 6.75 கோடி: பியூஷ் சாவ்லா - பந்துவீச்சாளர்
ரூ. 5.50 கோடி: சாம் கரண் - பந்துவீச்சாளர் ஆல்ரவுண்டர்