செய்திகள்

தேசிய நடைஓட்டம்: இர்ஃபான், செளம்யா முதலிடம்

DIN

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய நடைஓட்ட சாம்பியன் போட்டியில் ஆடவர் பிரிவில் கே.டி.இர்ஃபானும், மகளிர் பிரிவில் செளமியாவும் பட்டம் வென்றனர்.
 6-ஆவது ஓபன் தேசிய நடைஓட்ட சாம்பியன் போட்டி சென்னையில் தொடங்கியது. இதில் இந்தியா முழுவதும் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். ஆடவர் பிரிவில் கேரளத்தைச் சேர்ந்த கே.டி.இர்ஃபான் 1 மணி, 26 நிமிடம் 18 வினாடிகளில் 20 கி.மீ தூரத்தை கடந்து பட்டம் வென்றார். தேவேந்தர் சிங் (ஹரியாணா), சந்தீப்குமார் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை வென்றனர்.
 மகளிர் பிரிவில் கேரள வீராங்கனை பி.செளமியா 1 மணி 40 நிமிடம் 25 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து பட்டம் வென்றார். பிரியங்கா (உபி), ரவீனா (ஹரியாணா) இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பெற்றனர்.
 முதல் மூன்றிடங்களைப் பெற்றவர்களுக்கு முறையே ரூ.50 ஆயிரம், ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம் பரிசளிக்கப்பட்டது. இந்த நடைஓட்ட பந்தய், வரும் மார்ச் 17-இல் ஜப்பான் நவோமியில் நடக்கவுள்ள ஆசிய நடை ஓட்ட பந்தயத்தில் பங்கேற்க தேர்வுச் சுற்றாக அமைந்தது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT