செய்திகள்

உலகக் கோப்பை கிரிக்கெட்: நான்காம் நிலை பேட்ஸ்மேனாக கோலி களமிறங்க வாய்ப்பு

DIN


இங்கிலாந்தில் நடக்கவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி நான்காம் நிலை பேட்ஸ்மேனாக களமிறக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதிரடி பேட்ஸ்மேனான விராட் கோலி, தற்போது தொடக்க வீரர்களுக்கு அடுத்து மூன்றாம் நிலை பேட்ஸ்மேனாக களமிறங்கி வருகிறார்.
ஏற்கெனவே அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, நான்காம் நிலை பேட்ஸ்மேனாக கோலி களமிறங்கினால் சிறப்பாக இருக்கும் எனத் தெரிவித்திருந்தார். 
இந்த கருத்தை தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே. பிரசாத்தும் எதிரொலித்துள்ளார். அவர் தனியார் இணையதளம் ஒன்றிடம் கூறியுள்ளதாவது:
கோலி தற்போது மூன்றாம் நிலையில் சிறப்பாக ஆடி வருகிறார். உலகின் நம்பர் ஒன் வீரராகவும் திகழ்கிறார். அணியின் தேவைக்காக நான்காம் நிலையில் அவர் களமிறங்க வேண்டும்  என்றால் அவர் அதைச் செய்வார். அணியின் தேவை என்ன என்பது குறித்து நிர்வாகம் ஆய்வு செய்து வருகிறது.
இந்தியாவின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களை பிரித்து களமிறக்கலாம். மூன்றாம் நிலையில் நல்ல பேட்ஸ்மேனை களமிறக்கி, அணியில் சீரான நிலையை ஏற்படுத்தலாம். உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் அணி சரியான விகிதத்தில் அமைய, நெகிழ்வு தன்மை முக்கியமானது.
அம்பதி ராயுடு அல்லது வேறு எவரையாவது மூன்றாம் நிலையில் களமிறக்கலாம். தொடக்க வரிசையை நாம் இடையூறு செய்யக்கூடாது என ஏற்கெனவே கூறியிருந்தார் சாஸ்திரி என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுபிடரின் நிலவோ.. ஸ்ரீமுகி!

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

ஆடை சுதந்திரம் கோரியது குற்றமா? செளதியில் பெண்ணுரிமைப் போராளிக்குச் சிறை: அமைப்புகள் கண்டனம்!

"வாக்கு சதவிகித விவரங்களில் சந்தேகம்!”: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT