முகப்பு
செய்திகள்

நான் கேப்டனா?: ஷேன் வார்னேவின் கோரிக்கையை உதறினார் கம்மின்ஸ்

நான் நல்ல கேப்டனாக இருப்பேன் என நினைக்கவில்லை என்று கூறியுள்ளார்... 

Updated On : 31 ஜனவரி, 2024 at 6:46 AM
பகிர்:

தன்னை ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கவேண்டும் என்கிற ஷேன் வார்னேவின் கோரிக்கையை மறுத்துள்ளார் பேட் கம்மின்ஸ்.

அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்திலும், பெர்த்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.  மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பார்டர்-கவாஸ்கர் கோப்பையைத் தக்கவைத்துக்கொண்டது. இந்நிலையில் நான்காவது டெஸ்ட் சிட்னியில் நாளை தொடங்கவுள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாகப் பதவி வகிக்க வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் தகுதியானவர் என முன்னாள் வீரர் ஷேன் வார்னே கூறியுள்ளார். ஆனால் அவருடைய இந்த விருப்பத்தை மறுத்துள்ளார் கம்மின்ஸ். இதுகுறித்து அவர் கூறியதாவது:

தற்போதைய நிலையில் நான் கேப்டனாக வேண்டும் என்று கூறுவது அபத்தமானது. தற்போது பெயின் கேப்டன் பதவியை வகிக்கிறார். மிகச்சிறப்பாகத் தன் பணிகளைச் செய்துவருகிறார். நான் பந்துவீச்சில் மும்முரமாக உள்ளேன். பேட்டிங் செய்யும்போதும் என் உழைப்பை முழுவதும் அளிக்கிறேன். நான் நல்ல கேப்டனாக இருப்பேன் என நினைக்கவில்லை என்று கூறியுள்ளார். 

1958-63 காலக்கட்டத்தில் சுழற்பந்துவீச்சாளர் ரிச்சி பெனாட், ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்தார். 1956-ல் வேகப்பந்துவீச்சாளர் ரே லிண்ட்வால் ஒரே ஒரு டெஸ்டுக்கு கேப்டனாக இருந்தார். இவர்களைத் தவிர ஆஸி. கேப்டனாகும் வாய்ப்பு பந்துவீச்சாளர்களுக்குக் கிடைத்ததில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.