செய்திகள்

டி20: 14 ரன்களுக்கு சீன மகளிரணி ஆல் அவுட்

DIN


பாங்காக்கில் நடைபெற்ற டி20 ஆட்டம் ஒன்றில் சீன மகளிரணி வெறும் 14 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி, கிரிக்கெட் விளையாட்டை சீனாவில் பிரபலப்படுத்த வேண்டும் என திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. கடந்த 2010 ஆசிய போட்டியிலும் சீன கிரிக்கெட் அணி முதன்முறையாக களமிறங்கியது.
இந்நிலையில் பாங்காக்கில் கிரிக்கெட் அறிமுக நாடுகளான சீனா, யுஏஇ, தாய்லாந்து, மலேசியா, மியான்மர், இந்தோனேஷியா ஆகியவை இடையே டி20 போட்டி நடந்தது. இதில் ஞாயிற்றுக்கிழமை யுஏஇ அணியும்-சீன அணிகளும் மோதின. முதலில் ஆடிய யுஏஇ 203/3 ரன்களை குவித்தது.
பின்னர் ஆடிய சீன அடி வெறும் 14 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹின் லிலி மட்டுமே அதிகபட்சமாக 4 ரன்களை எடுத்தார்.
ஏற்கெனவே சீன ஆடவர்-நேபாள அணிகளுக்கு இடையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தகுதி ஆட்டத்தில் வெறும் 2 ரன்களுக்கு சீனா ஆல் அவுட்டானது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT