செய்திகள்

பெண்களை தரக்குறைவாக விமர்சனம்: பாண்டியா, ராகுல் மீதான இடைக்கால தடை நீக்கம்  

DIN

மும்பை: தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பெண்களை தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக கிரிக்கெட் வீரர்கள் பாண்டியா மற்றும் ராகுல் மீது விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்குவதாக பிசிசிஐ-யின் நிர்வாகக் கமிட்டி அறிவித்துள்ளது. 

பிரபல பாலிவுட் இயக்குனரான் கரண் ஜோகர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடத்தி வரும் 'காஃப் வித் கரண்' என்னும் நிகழ்ச்சியில் பெண்களின் மாண்புக்குக் களங்கம் விளைவிக்கும் விதமாகப் பேசியதற்காக, இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பாண்டியா மற்றும்  ராகுல் மீது உச்ச நீதிமன்றம் நியமித்த பிசிஐஐயின் நிர்வாகக் குழு (சிஒஏ) இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. 

தற்போது பாண்டியா மற்றும் ராகுல் மீது விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்குவதாக பிசிசிஐ-யின் நிர்வாகக் கமிட்டி அறிவித்துள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக புதிதாக நியமிக்கப்பட்ட சிறப்பு நம்பிக்கை ஆலோசகர் பி.எஸ்.நரசிம்மாவுடன் கலந்தாலோசித்த பிறகு இம்முடிவை சிஒஏ அறிவித்துள்ளது.

ஆனாலும் இது குறித்த நீதிமன்ற விசாரணை நிலுவையில் உள்ளது, இதற்காக உச்ச நீதிமன்றம் குறைதீர்ப்பாளர் ஒருவரை நியமித்து விசாரணை நடத்தப்படும் என்றும், விசாரணை தேதி பிப்ரவரி 5ம் தேதி என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT