செய்திகள்

கிராண்ட்ஸ்லாமில் ஹாட்ரிக்: ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்று ஜோகோவிச் சாதனை

ஆடவர் ஒற்றையர் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை ஜோகோவிச் 7-ஆவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார். 

DIN


ஆடவர் ஒற்றையர் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை ஜோகோவிச் 7-ஆவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார். 

ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில், தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஆகியோர் மோதினர்.  

இதில், தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 6-3, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் நடாலை வீழ்த்தினார். இதன்மூலம், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டத்தை 7-ஆவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார். முன்னதாக, ரோஜர் பெடரர் மற்றும் ராய் எமேர்சன் ஆகியோர் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டத்தை 6 முறை வென்றிருந்ததே சாதனையாக இருந்தது. 

மேலும், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களைத் தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டத்தையும் வென்றிருப்பதால், கிராண்ட்ஸ்லாமில் ஹாட்ரிக் புரிந்துள்ளார்.

இது அவருடைய 15-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

SCROLL FOR NEXT