செய்திகள்

ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவு: ஷான் மார்ஷ் விலகல்

2019 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டி நெருங்கிய வேளையில் ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஷான் மார்ஷ் வெள்ளிக்கிழமை விலகினார்.

Raghavendran

2019 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டி நெருங்கிய வேளையில் ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஷான் மார்ஷ் வெள்ளிக்கிழமை விலகினார்.

முன்னதாக வலைப்பயிற்சி செய்துகொண்டிருந்த போது வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் வீசிய பந்து மார்ஷின் வலது கையில் பலமாகத் தாக்கியது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். எனவே ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஷான் மார்ஷ் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் சேர்க்கப்பட்டார்.

தற்போது இங்கிலாந்தில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய ஏ அணியில் இடம்பெற்றுள்ள ஹேண்ட்ஸ்கோம்ப் விரைவில் ஆஸ்திரேலிய அணியுடன் இணையவுள்ளார். நடுவரிசையில் ஷான் மார்ஷ் இல்லாதது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவு தான் என்று அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் தெரிவித்தார்.

இதேபோன்று மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் நட்சத்திர வீரரான க்ளென் மேக்ஸ்வேல் வலது கையில் பலமாகத் தாக்கியது. இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேக்ஸ்வெல்லுக்கு சிகிச்சை அளித்தபோது பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

சிறிது ஓய்வுக்குப் பின் அவர் மீண்டும் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினார். இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு ஒரே நேரத்தில் ஏற்பட இருந்த 2-ஆவது பின்னடைவு அதிர்ஷ்டவசமாகத் தவிர்க்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளை ரோஜா... நேஹா ஷெட்டி!

ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்; இந்தியா 166 ரன்கள் முன்னிலை!

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

SCROLL FOR NEXT