செய்திகள்

பென் ஸ்டோக்ஸ் அந்த 4 ரன்களை நிராகரித்தார்: சர்ச்சையை கிளப்பும் இங்கிலாந்து வீரர்

2019 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மார்டின் கப்டில் அடித்த பந்து பென் ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு பவுண்டரிக்கு சென்றது. 

Raghavendran

2019 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மார்டின் கப்டில் அடித்த பந்து பென் ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு பவுண்டரிக்கு சென்றது. இதனால் ஓடி எடுத்த 2 ரன்களுடன் கூடுதலாக 4 ரன்கள் என 6 ரன்கள் கிடைத்தது. மேலும் இந்தப் போட்டியின் போக்கை மாற்றிய தருணமாகவும் இது அமைந்துவிட்டது. 

இந்நிலையில், ஓவர் த்ரோ மூலம் கிடைத்த அந்த ரன்களை தனக்கு வழங்க வேண்டாம் என களத்தில் இருந்த நடுவர்களிடம் பென் ஸ்டோக்ஸ் கேட்டுக்கொண்டதாக இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

கிரிக்கெட் விதிகளின் அடிப்படையில் ஃபீல்டர் ஏறியும் பந்து தடுக்கப்படாமல் பவுண்டரிக்கு சென்றால் அது ரன்களாகத்தான் கணக்கெடுத்துக்கொள்ளப்படும். இந்த விதியை நம்மால் எதுவும் செய்ய முடியாது. அந்த காட்சிகளை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். பின்னர் இதுகுறித்து களத்தில் இருந்த நடுவரிடம் சென்று அந்த 4 ரன்களை வழங்க வேண்டாம் என பென் ஸ்டோக்ஸ் கேட்டுக்கொண்டது தொடர்பாக நான் மைக்கெல் வானுடன் விவாதித்தேன் என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

தமிழ் மண்ணில் அடிமைத்தனத்தை வீழ்த்துவோம்: உதயநிதிஸ்டாலின்

கூலி டிரெய்லர்!

6.50 லட்சம் பிகார் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? ப.சிதம்பரம் கண்டனம்!

கால்வாயில் கார் கவிழ்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நிதியுதவி!

SCROLL FOR NEXT