செய்திகள்

ஓய்வு பெறுகிறார் மலிங்கா: பத்திரிகையாளர் சந்திப்பில் கேப்டன் தகவல்

இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுகிறார்.

Raghavendran

இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுகிறார்.

வங்கதேசத்துக்கு எதிராக கொழும்புவில் ஜூலை 26-ஆம் தேதி நடைபெறும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியுடன் விடைபெறுகிறார். இச்செய்தியை இலங்கை கேப்டன் திமுத் கருணரத்னே பத்திரிகையாளர் சந்திப்பில் உறுதி செய்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

வங்கதேசத்துடனான ஒருநாள் தொடரின் முதல் போட்டியுடன் லசித் மலிங்கா ஓய்வு பெறவுள்ளதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேர்வுக்குழுவினருடன் அவர் என்ன கூறினார் என்று எனக்கு தெரியாது என்று தெரிவித்தார்.

335 விக்கெட்டுகளுடன் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 3-ஆவது இலங்கை வீரர் என்ற சாதனையுடன் மலிங்கா விலகுகிறார். ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் தற்போது 10-ஆவது இடத்தில் உள்ளார்.

இருப்பினும் அனில் கும்ப்ளேவின் 337 விக்கெட்டுகள் சாதனையை அவர் முறியடிப்பார் என்று கருதப்படுகிறது. மேலும் கொழும்புவின் பிரேமதாஸா மைதானத்தில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையையும் படைக்க வாய்ப்புள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT