செய்திகள்

முகமது அமிர் ஓய்வு: வாசிம் அக்ரம், அக்தர் விமரிசனம்

முகமது அமிரின் ஓய்வு அறிவிப்புக்கு பாகிஸ்தானின் முன்னாள் வீரர்களான வாசிம் அக்ரமும் சோயிப் அக்தரும் விமரிசனம் செய்துள்ளார்கள்...

எழில்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர் வெள்ளிக்கிழமை அறிவித்தார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாட இருக்கிறார். 

கடந்த 2010-ஆம் ஆண்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முகமது அமிருக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. தடைக்காலம் முடிந்து 2015 முதல் பாகிஸ்தான் அணிக்காக அவர் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் முகமது அமிரின் ஓய்வு அறிவிப்புக்கு பாகிஸ்தானின் முன்னாள் வீரர்களான வாசிம் அக்ரமும் சோயிப் அக்தரும் விமரிசனம் செய்துள்ளார்கள். அக்ரம் கூறியதாவது:

முகமது அமிரின் இந்த அறிவிப்பு ஆச்சர்யம் அளிக்கிறது. ஏனெனில் 27-28 வயதில் தான் ஒரு வீரர் தன் திறமையின் உச்ச நிலையை அடைவார். சிறந்த அணிகளுடனான உங்கள் திறமை டெஸ்ட் கிரிக்கெட்டில்தான் மதிப்பிடப்படும். பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் விளையாடவுள்ள 2 டெஸ்டுகளிலும் இங்கிலாந்தில் விளையாடவுள்ள 3 டெஸ்டுகளிலும் அமிரின் பந்துவீச்சு பாகிஸ்தானுக்குத் தேவைப்படும் என்று கூறியுள்ளார்.

சோயிப் அக்தர் ஒரு பேட்டியில் கூறியதாவது: பாகிஸ்தானுக்கு தன்னுடைய பங்களிப்பை அவர் அளிக்கவேண்டும். 27 வயது வீரராக நான் இருந்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவே விருப்பப்படுவேன். ஒரு கிரிக்கெட் வீரருக்கான உண்மையான சோதனை டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் இருக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி தடுமாறி வருகிறது. அமிரின் பங்களிப்பு பாகிஸ்தானுக்கு உதவியாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு ஆண்டுகளில் 42% மதிப்பிழக்கும் மின்சார வாகனங்கள்! காரணம் என்ன?

காந்தா டிரைலர் அறிவிப்பு விடியோ!

எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு: மமதா தலைமையில் பிரமாண்ட பேரணி!

ஒரு படத்தை உருவாக்க இவ்வளவு உழைப்பா? ஆச்சரியப்படுத்தும் மாரி செல்வராஜ்!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்! அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்! | ADMK | CBE

SCROLL FOR NEXT