ஆடம் சாம்பா பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த சர்ச்சைக்கு ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் விளக்கமளித்துள்ளார்.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை ஆட்டத்தில் சுழற்பந்துவீச்சாளர் ஆடம் சாம்பா பந்துவீசும் போது தனது பாக்கெட்டில் அடிக்கடி கை வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணியின் ஸ்மித், வார்னர் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தண்டனை அனுபவித்து மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள நிலையில், மற்றொரு ஆஸி. வீரர் மீது அதே புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆஸி. கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறுகையில்,
நான் இன்னும் நீங்கள் குறிப்பிடும் புகைப்படத்தைப் பார்க்கவில்லை. ஆனால், ஆடம் சாம்பா உள்ளங்கைகளை உஷ்ணப்படுத்தும் கையடக்க வார்மரை பயன்படுத்துவது வழக்கம். ஒவ்வொரு ஆட்டதிலும் அவர் இதனைப் பயன்படுத்துவார். எனவே இதில் எந்தவித கருத்தையும் நான் தெரிவிக்க விரும்பவில்லை என்று விளக்கமளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.