செய்திகள்

கடன் பிரச்னையைத் தீர்க்க கோப்பைகளை ஏலம் விடுகிறார் போரீஸ் பெக்கர்

DIN


 கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காக தான் விளையாடி பெற்ற கோப்பைகள், பரிசுப்பொருள்களை ஏலத்தில் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் பிரபல டென்னிஸ் வீரர் போரீஸ் பெக்கர்.
ஜெர்மனியின் போரீஸ் பெக்கர் 17 வயதில் விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற சாதனைக்குரியவர். தொடர்ந்து 3 விம்பிள்டன் பட்டம் உள்பட 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், 49 பட்டங்களை வென்றவர். போரிஸ் பெக்கரின் அதிரடி சர்வீஸ் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
51 வயதான பெக்கர் கடந்த 2017 ஆம் ஆண்டு திவாலானதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
பிரிட்டனைச் சேர்ந்த வெய்ல்ஸ் ஹார்டி என்ற நிறுவனம் மொத்தம் 82 பொருள்களை ஏலம் விடுகிறது. இந்த ஏலம் ஜூலை 11-இல் முடிவடைகிறது. இதில் கிடைக்கும் வருவாய் மூலம் பெக்கரின் ஒரு பகுதி கடன்கள் செலுத்தப்படும் எனக் கருதப்படுகிறது.
பல்வேறு கடன் பிரச்னைகளில் சிக்கியுள்ள பெக்கர் அவற்றை தீர்ப்பதற்காக போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT