ஆஸி.-இந்திய அணிகள் இடையிலான மூன்றாவது ஒரு நாள் ஆட்டத்தின் போது, புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய வீரர்கள் ராணுவ தொப்பி அணிந்து விளையாடினர்.
மேலும் தங்கள் ஆட்ட ஊதியத்தையும் அவர்களின் குடும்பங்களுக்கு வழங்கினர். இதற்கு பாகிஸ்தான் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
ராணுவ வீரர்கள் தொப்பி அணிந்து, புல்வாமா விவகாரத்தை கோலி தலைமையிலான அணி அரசியலாக்கி விட்டது. இதுதொடர்பாக ஐசிசி தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற ராணுவ தொப்பிகளை அணிவதை தடுக்கா விட்டால், காஷ்மீரில் இந்திய ராணுவத்தினர் புரியும் கொடுமைகளை கண்டித்து பாக். வீரர்களும் மைதானத்தில் கருப்பு பட்டைகளை அணிந்து விளையாட வேண்டியிருக்கும் என்று பாகிஸ்தான் அமைச்சகம் மிரட்டல் விடுத்திருந்தது.
இந்நிலையில், ராணுவ தொப்பி அணிந்து விளையாட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முறையான அனுமதி பெற்றதாக சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐசிசி) திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.