செய்திகள்

இந்தியன்வெல்ஸ் ஏடிபி டென்னிஸ் போட்டி: 3-வது சுற்றில் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தோல்வி!

எனினும் இரு அசத்தலான வெற்றிகளால் பிரஜ்னேஷுக்கு இந்தப் போட்டி மறக்கமுடியாததாக அமைந்துள்ளது...

எழில்

அமெரிக்காவின் இந்தியன்வெல்ஸ் ஏடிபி டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் மூன்றாவது சுற்றில் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.

2-வது சுற்றில், உலகின் 18-ஆம் நிலை வீரர் நிக்கோலஸ் பஸிலாஷ்வில்லியை வீழ்த்தி 29 வயது பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தனது வாழ்க்கையில் பெரிய வெற்றியை பெற்றார். இதனால் மூன்றாவது சுற்று ஆட்டம் அனைவராலும் கவனிக்கப்பட்டது. எனினும், குரோஸியாவைச் சேர்ந்த 40 வயது இவோ கர்லோவிக் 6-3, 7-6(3) என்ற நேர் செட்களில் பிரஜ்னேஷை வீழ்த்தி அடுத்தச் சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 1 மணி நேரம் 13 நிமிடங்கள் நடைபெற்றது. 

எனினும் இரு அசத்தலான வெற்றிகளால் பிரஜ்னேஷுக்கு இந்தப் போட்டி மறக்கமுடியாததாக அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜகவின் வாக்கு திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா?: கார்கே கேள்வி

முழு சந்திர கிரகணம் தொடங்கியது!

சின்ன திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள்!

விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது: அமைச்சர் ராஜகண்ணப்பன்

களிப்பு... பாயல் ராதாகிருஷ்ணா!

SCROLL FOR NEXT