செய்திகள்

முகமது ஷமி மீது வரதட்சணை, பாலியல் வன்கொடுமை பிரிவுகளில் வழக்கு

Raghavendran

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி மீது வரதட்சணை கொடுமை மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த ஒரு மாதத்தில் இவ்வழக்கு தொடர்பான விசாரணை நடைபெறவுள்ளதாக கொல்கத்தா போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். 

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாக கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மற்றும் அவரது தாய் உட்பட குடும்ப உறுப்பினர்கள் 4 பேர் மீது கற்பழிப்பு, தாக்குதல் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மனைவி ஹாசின் ஜஹான் போலீஸில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், முகமது ஷமி மீது தொடரப்பட்ட இந்த குற்றப்பத்திரிகையில் தாக்குதல், கொலை முயற்சி மற்றும் கற்பழிப்பு உள்ளிட்ட புகார்களை போலீஸார் சேர்க்கவில்லை என முகமது ஷமியின் வழக்கறிஞர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT