செய்திகள்

பிரெஞ்சு ஓபன் 2019: பரிசுத் தொகை உயர்வு

DIN


பிரெஞ்சு ஓபன் 2019 போட்டிக்கு பரிசுத் தொகையை 8 சதவீதம் உயர்த்தி வழங்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஆடவர், மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்வோருக்கு ரூ.17.9 கோடி (2.3 மில்லியன் யூரோ) பரிசளிக்கப்படும்.
விம்பிள்டன், ஆஸி. ஓபன், யுஎஸ் ஓபன், உள்ளிட்ட கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் குறைந்த பரிசுத் தொகை கொண்டதாகபிரெஞ்சு ஓபன் விளங்குகிறது.
கடந்த ஆண்டு யுஎஸ் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச், ஒஸாகாவுக்கு ரூ.26 கோடி பரிசளிக்கப்பட்டது. 
இந்நிலையில் பிரெஞ்சு ஓபன் போட்டியில் பரிசுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. முதல் சுற்றில்வெளியேறும் வீரர்களுக்கு 15 சதவீதம் உயர்வாக 46000 யூரோக்கள் தரப்படும். பிரதான சுற்றுக்கு தகுதி பெறாமல் தோல்வியுறும் வீரர்களுக்கு 26000 யூரோக்கள் தரப்படுகிறது. நிகழாண்டு 2019 பிரெஞ்சு ஒபன் போட்டி வரும் மே 26-ஆம் தேதி தொடங்குகிறது. ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டம் ஜூன் 9-இல் 
நடக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கேஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

துர்ஸ்தானம் எனும் 8ம் வீட்டின் அதிபதி தரும் பலன்கள்!

SCROLL FOR NEXT