செய்திகள்

யூரோ 2020:ஸ்பெயின், இத்தாலி வெற்றி

DIN

யூரோ 2020 கால்பந்து தகுதிச் சுற்று ஆட்டங்களில் முன்னாள் உலக சாம்பியன்கள் ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்டவை தகுதி பெற்றுள்ளன.
வலேன்சியாவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் நார்வே அணியை வீழ்த்தியது. ரோட்ரிகோ, செர்ஜியோ ராமோஸ் ஆகியோர் அற்புதமாக கோலடித்தனர். நார்வே தரப்பில் ஜோஷ்வா கிங் ஓரே கோலை அடித்தார். பின்னர் நட்சத்திர வீரர் செர்ஜியோ ரமோஸ் இரண்டாவது கோலடித்தார்.
உடைனில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி 2-0 என்ற கோல் கணக்கில் பின்லாந்தை சாய்த்தது. கீன், நிக்கோலோ கோலடித்தனர்.
போஸ்னியா அணி 2-1 என ஆர்மீனியாவையும், கிரீஸ் 2-0 என லீசென்செஸ்டீனையும், அயர்லாந்து 1-0 எனஜிப்ரால்டரையும், ஸ்விடன் 2-1 என ருமேனியாவையும் வென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT