செய்திகள்

வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்: அஸ்வின்

DIN


நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகளில் கிரிக்கெட் வீரர்கள் எங்கு ஆடுகின்றனரோ அங்கு வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் கோரியுள்ளார்.
நாடாளுமன்ற பொதுத் தேர்தல் ஏப். 11 முதல் மே 19 வரை மொத்தம் 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் 2019 போட்டியும் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதனால் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் தங்கள் அணிகளுடன் பயணிக்க வேண்டியுள்ளது.
இதற்கிடையே அதிகளவில் வாக்குப்பதிவு நடைபெற மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும் என பிரபல வீரர்கள் தவன், தீபா கர்மாகர், அஸ்வின், ஹிமா தாஸ், சாக்ஷி மாலிக் ஆகியோரின் பெயர்களை டேக் செய்து சுட்டுரையில் பதிவிட்டிருந்தார் பிரதமர் மோடி.
இந்நிலையில் அஸ்வின் இதுதொடர்பாக கூறியுள்ளதாவது:
ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் ஐபிஎல் போட்டிகளில் வெவ்வேறு பகுதிகளில் ஆடவுள்ளனர். எனவே தேர்தலின் போது அவர்கள் அங்கேயே வாக்களிக்க வகை செய்ய வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார் அஸ்வின்.
வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதால், நாட்டின் மூலை முடுக்கில் உள்ள அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் எனவும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT