செய்திகள்

கிங்ஸ் கோப்பை கால்பந்து: பயிற்சி முகாமுக்கு 37 பேர் தேர்வு

DIN


தாய்லாந்தில் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள கிங்ஸ் கோப்பை கால்பந்து போட்டிக்கான இந்திய அணியின் பயிற்சி முகாமுக்கு 37 பேரை தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் தேர்வு செய்துள்ளார்.
வரும் ஜூன் 5 முதல் 8-ஆம் தேதி வரை தாய்லாந்தின் புரிராம் நகரில் கிங்ஸ் கோப்பை போட்டி நடக்கிறது. இதில் தாய்லாந்து, இந்தியா, வியட்னாம் உள்ளிட்டவை கலந்து கொள்கின்றன. கடந்த 1977-க்கு பின் தற்போது தான் இந்தியா இதில் கலந்து கொள்கிறது.
புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்டிமாக் தலைமையில் இந்தியா எதிர்கொள்ளும் முதல் போட்டி இதுவாகும். இதற்கான பயிற்சி முகாம் புதுதில்லியில் 20-ஆம் தேதி முதல் நடக்கிறது.
இதற்காக 37 பேரை தேர்வு செய்துள்ளார் ஸ்டிமாக்.  
காயமுற்றுள்ள ஸ்ட்ரைக்கர் ஜிஜே, ஹாளிச்சரண் நர்சரி, மந்தர் ராவ் தேசாய், ஆஷிக் குருனியன், நரேந்தர் கெலாட், ஜெர்ரி லால்ரின்ஸுலா ஆகியோர் முகாமுக்கு தேர்வு செய்யப்படவில்லை. 
இதுதொடர்பாக ஸ்டிமாக் கூறியதாவது: ஐ-லீக், ஐஎஸ்எல் போட்டிகள், ஆசிய கால்பந்து கோப்பை போட்டிகளில் பங்கேற்றவர்களில் இருந்து சிறந்தவர்களை தேர்வு செய்துள்ளோம். வீரர்களுடன் இணைந்து பணிபுரிய ஆர்வமாக உள்ளேன் என்றார்.
கிங்ஸ் கோப்பைக்கு பின் ஜூலை மாதம் இந்தியாவில் ஹீரோ இன்டர்காண்டினென்டல் கோப்பை போட்டி நடக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் கைதைக் கண்டித்து தில்லியில் ஆம் ஆத்மியினர் ஆர்ப்பாட்டம்!

மோடி விரைவில் மேடையிலேயே கண்ணீர் விடும் நிலை வரக்கூடும்: ராகுல் காந்தி

கவினின் ‘ஸ்டார்’ பட டிரைலர்!

தமிழகத்தில் இயல்பைவிட 83% மழை குறைவு!

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT