செய்திகள்

உலகக் கோப்பை ஆட்டத்தின் போக்கையே மாற்றிய 10 தருணங்கள்: 1992 உலகக் கோப்பை பாக்.- தென்னாப்பிரிக்கா குரூப் ஆட்டம்

DIN


இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 211 ரன்களை சேர்த்தது. 
பின்னர் ஆடிய பாகிஸ்தான் நிலையாக ஆடி ரன்களை சேர்த்து வந்தது. 
பிரிஸ்பேனில் நடைபெற்ற ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. 28 ஓவர்களில் 4.9 ரன் சராசரி தேவை என்ற நிலையில் மழையால் 14 ஓவர்களில் 8.5 ரன் சராசரியாக குறைக்கப்பட்டது. 

அப்போது இம்ரான் கான்-இன்ஸமாம் உல் ஹக் ஆகியோர் ஒருங்கிணைந்து 85 ரன்களை சேர்த்து வெற்றியை நோக்கி பயணித்தனர்.

31-ஆவது ஓவரின் போது, இன்ஸமாம் லெக் பையில் 1 ரன் எடுக்க ஓடினார். இம்ரான் கான் தடுத்தததால் கிரீஸ் நோக்கி திரும்புவதற்குள், ஜான்டி ரோட்ஸ் பந்தை கைப்பற்றி ஸ்டம்பை நோக்கி வீசி அற்புதமாக இன்ஸமாமை ரன் அவுட் செய்தார். இதனால் பாகிஸ்தான் அணி சரிந்து 20 ரன்களில் தோற்றது.

2019 ஐசிசி உலகக் கோப்பை மைதானங்கள்...

ஹாம்ப்ஷையர் பெளல் -செளதாம்ப்டன் 

மொத்த ஆட்டங்கள் 5

மொத்த பார்வையாளர் எண்ணிக்கை 17,000


கடந்த 2001-இல் கட்டப்பட்ட இந்த மைதானம் முதன்முறையாக உலகக் கோப்பை ஆட்டங்களை நடத்துகின்றது. ஹாம்ப்ஷையர் கவுண்டி அணி சொந்த மைதானமான இது, செளதாம்ப்டன் நகரின் புறநகரில் உள்ளது. கடந்த 2004 ஐசிசி சாம்பியன்ஸ் போட்டி 5 ஆட்டங்களும் இங்கு நடந்தன. 

ஆட்டங்கள்

ஜூன் 5-தென்னாப்பிரிக்கா-இந்தியா, ஜூன் 10-தென்னாப்பிரிக்கா-மே.இ.தீவுகள்
ஜூன் 14-இங்கிலாந்து-மே.இ,தீவுகள், ஜூன் 22-இந்தியா-ஆப்கானிஸ்தான் 
ஜூன் 24-வங்கதேசம்-ஆப்கானிஸ்தான்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலை கேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்ஸா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT