செய்திகள்

வெற்றியை நெருங்கும் சமயத்தில் திடீரென தடுமாறிய இங்கிலாந்து: அபார பந்துவீச்சினால் வெற்றி கண்ட நியூஸிலாந்து!

எழில்

20 ஓவர்களில் 181 ரன்கள் எடுக்க வேண்டும். கடினமான இலக்கு தான். ஆனால் 10-வது ஓவரின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள், 14.5 ஓவரின்போது 2 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் என வலுவான நிலையில் இருந்தது இங்கிலாந்து அணி. ஆனால் அந்த இடத்திலிருந்து ஆரம்பித்தது சரிவு. மனம் தளராமல் கடைசி வரைப் போராடி தூரத்தில் இருந்த வெற்றியைத் தனதாக்கிக் கொண்டுள்ளது நியூஸிலாந்து அணி.

நெல்சனில் நடைபெற்ற 3-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. நல்ல முடிவு தான் என நினைக்கும் விதத்தில் அபாரமாக விளையாடினார்கள் நியூஸி. பேட்ஸ்மேன்கள். கப்தில் 17 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். கிராண்ட்ஹோம் 35 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். முதல் 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்து அடுத்தப் பகுதியில் இன்னும் சிறப்பாக விளையாடியது நியூஸிலாந்து. அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. 

இங்கிலாந்து அணி முதல் 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் எடுத்தது.  10-வது ஓவரின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள், 14.5 ஓவரின்போது 2 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் என வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது இங்கிலாந்து அணி. ஆனால், மாலன் 55 ரன்களிலும் மார்கன் 18 ரன்களிலும் ஆட்டமிழந்த பிறகு தடுமாற ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் 18 பந்துகளில் 5 விக்கெட்டுகளைக் கடகடவென இழந்தது இங்கிலாந்து அணி. இதனால் கடைசி 12 பந்துகளில் 31 ரன்கள் என்கிற இலக்கையும் அந்த அணியால் நிறைவேற்ற முடியவில்லை. இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. மனம் தளராமல் போராடி, அட்டகாசமாகப் பந்துவீசி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்துள்ளது நியூஸிலாந்து அணி. இதன்மூலம், அந்த அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT