முகப்பு
செய்திகள்

அதிகாரபூர்வ அறிவிப்பு: தில்லி கேபிடல்ஸ் அணியில் ரஹானே!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2011-லிருந்து இதுவரை 100 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ளார் ரஹானே.

Updated On : 14 நவம்பர், 2019 at 6:03 PM
பகிர்:

பஞ்சாப் அணியிலிருந்து அஸ்வின் மாறியது போல ராஜஸ்தான் அணியிலிருந்து தில்லி கேபிடல்ஸ் அணிக்கு மாறியுள்ளார் பிரபல பேட்ஸ்மேன் ரஹானே.

இந்தத் தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஷிகர் தவன், பிருதிவி ஷா, ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் என வலுவான இந்திய பேட்ஸ்மேன்களைக் கொண்ட தில்லி அணிக்கு மேலும் பலம் சேர்க்கவுள்ளார் ரஹானே

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2011-லிருந்து இதுவரை 100 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ளார் ரஹானே. ராஜஸ்தான் அணிக்காக ஐபிஎல்-லில் 2810 ரன்கள் குவித்துள்ளார். 

Advertisement

மேலும் மயங்க் மார்கண்டே, ராகுல் டெவாடியா ஆகிய இரு தில்லி அணி வீரர்களும் ராஜஸ்தான் அணிக்கு மாறியுள்ளார்கள். 

ஐபிஎல் 2020 தொடருக்கான வீரா்கள் ஏலம் வரும் டிசம்பா் 19-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.