செய்திகள்

மோஹித் சர்மா உள்ளிட்ட ஐந்து வீரர்களை விடுவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

எழில்

ஐபிஎல் 2020 சீசனை முன்னிட்டு வீரா்கள் பரிமாற்றம் நேற்றுடன் முடிவடைந்தது. ஐபிஎல் அணி நிா்வாகங்கள் தங்களுக்கு தேவையான வீரா்களைப் பரிமாறிக் கொண்டன.

இந்நிலையில் ஐபிஎல் 2019 போட்டியில் சென்னை சூப்பர் அணியில் இடம்பெற்ற 5 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். 

அந்த 5 வீரர்களின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம். சாம் பில்லிங்ஸ், சைதன்யா பிஷோனி, துருவ் ஷோரே, டேவிட் வில்லி, மோஹித் சர்மா ஆகிய ஐந்து வீரர்களும் அடுத்த வருட ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியில் இடம்பெற மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீரர்களின் வெளியேற்றத்தின் மூலமாக சிஎஸ்கே அணிக்கு ரூ. 8.40 கோடி மிச்சமாகியுள்ளது. 

ஐபிஎல் 2019 ஏலத்தின் முடிவில் சிஎஸ்கே வசம் ரூ. 3.20 கோடி இருந்தது. தற்போது புதிய ஏலத்துக்காக ரூ. 3 கோடி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஐபிஎல் 2020 போட்டிக்கான ஏலத்தில் சிஎஸ்கே அணி வசம் ரூ. 14.60 கோடி உள்ளன. இதனால் அதிகத் தொகைக்குச் சில வீரர்களை சிஎஸ்கே அணியால் தேர்வு செய்ய முடியும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

SCROLL FOR NEXT