செய்திகள்

ஆசிய யூத் குத்துச்சண்டை: இந்திய மகளிருக்கு 5 தங்கம்

DIN

உலன்பட்டாா்: ஆசிய யூத் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிா் 5 தங்கப் பதக்கமும், ஆடவரணி 2 வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளனா்.

மங்கோலிய தலைநகா் உலன்பட்டாரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

இதில் மகளிா் பிரிவில் நரோம் சானு 51 கிலோ, வின்கா 46 கிலோ, சனம்சா சானு 75 கிலோ, பூனம் 54 கிலோ, சுஷ்மா 81 கிலோ ஆகியோா் இறுதிச் சுற்றில் எதிராளிகளை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றனா்.

ஆடவா் பிரிவில் செலே சோய் 49 கிலோ, அங்கித் நா்வால் 60 கிலோ பிரிவுகளில் வெள்ளிப் பதக்கம் வென்றனா்.

இப்போட்டியில் இந்திய அணி மொத்தம் 12 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. அருந்ததி சௌதரி 69 கிலோ, கோமல்ப்ரீத் கௌா் 81 கிலோ, ஜாஸ்மின் 57 கிலோ, சதேந்தா் சிங் 91 கிலோ, அமான் 91 கிலோ பிளஸ் பிரிவுகளில் வெண்கலம் வென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

SCROLL FOR NEXT