செய்திகள்

மே.இ. தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்ற இந்திய மகளிர் அணி!

எழில்

ஒருநாள் தொடருக்கு அடுத்ததாக மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான டி20 தொடரையும் வென்றுள்ளது இந்திய மகளிர் அணி.

ஏற்கெனவே டி20 தொடரை வென்று 4-0 என முன்னிலை வகித்த நிலையில் மே.இ. தீவுகள் அணியை நேற்று எதிர்கொண்டது இந்திய மகளிர் அணி. பிராவிடன்ஸில் நடைபெற்ற 5-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. 19 வயது ஜெமிமா ரோட்ரிகஸ் 50 ரன்களும் வேதா கிருஷ்ணமூர்த்தி 57 ரன்களும் எடுத்தார்கள். 

இந்த இலக்கை விரட்ட மே.இ. தீவுகள் அணி மிகவும் சிரமப்பட்டது. இந்திய மகளிர் அணியின் அசத்தலான பந்துவீச்சால் அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய மகளிர் அணி 5-வது டி20 ஆட்டத்தை 61 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டி20 தொடரை முழுமையாக வென்றது. தனது 50-வது டி20 ஆட்டத்தை விளையாடிய அனுஜா பாட்டீல் 3 ஓவர்கள் வீசி 3 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

5-வது டி20 ஆட்டத்தின் சிறந்த ஆட்டக்காரர் விருது வேதா கிருஷ்ணமூர்த்திக்கும் தொடரின் சிறந்த ஆட்டக்காரர் விருது சுஷ்மா வெர்மாவுக்கு வழங்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT