சீனாவில் நடைபெற்று வரும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றுள்ளார்.
ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பைப் போட்டி சீனாவின் புடியனில் நவம்பர் 17-ல் தொடங்கி நவம்பர் 23 வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 250.8 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார் தமிழ்ப் பெண்ணான இளவேனில்.
அதேபோல மனு பாக்கர், 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். அவர் 244.7 புள்ளிகள் பெற்று இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.