மகன் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு: நடவடிக்கை எடுக்க சச்சின் கோரிக்கை
தன்னுடைய மகன் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளதால் அதுகுறித்து நடவடிக்கை எடுக்க ட்விட்டர் இந்தியா நிறுவனத்திடம்...
தன்னுடைய மகன் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளதால் அதுகுறித்து நடவடிக்கை எடுக்க ட்விட்டர் இந்தியா நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்.
இதுகுறித்து ட்விட்டரில் அவர் தெரிவித்ததாவது:
என் மகனோ மகளோ ட்விட்டரில் இல்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். @jr_tendulkar என்கிற இந்த ட்விட்டர் கணக்கு, என் மகனுடையது என்பது போலச் சித்தரித்து - நிறுவனங்கள் மற்றும் பிரபலங்களைப் பற்றி தவறான நோக்கத்துடன் பதிவிடுகிறது. இதுகுறித்து ட்விட்டர் இந்தியா நிறுவனம் விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
Advertisement