செய்திகள்

வேகமாக 350 விக்கெட்டுகள்: முத்தையா முரளிதரன் சாதனையை சமன் செய்தாா் அஸ்வின்

DIN

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வேகமாக 350 விக்கெட்டுகள் வீழ்த்திய இலங்கை சுழற்பந்து வீச்சாளா் முத்தையா முரளிதரன் சாதனையை சமன் செய்தாா் இந்தியாவின் அஸ்வின்.

இரு அணிகளுக்கு இடையே விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் ஆட்டத்தில் அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். இதற்கிடையே ஆட்டத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது ஓவரில் டி புருயனை போல்டாக்கினாா் அஸ்வின். இதன் மூலம் 349 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த அஸ்வின், 66 டெஸ்ட் ஆட்டங்களில் 350 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்த முத்தையா முரளிதரன் சாதனையையும் சமன் செய்தாா்.

அஸ்வினும் 66 டெஸ்ட் ஆட்டங்களில் 350 விக்கெட்டுகளை துரிதமாக வீழ்த்தினாா்.

கடந்த 2001-ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் முரளிதரன் இச்சாதனையை நிகழ்த்தி இருந்தாா்.

இதன் மூலம் 77 டெஸ்ட்களில் 350 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்த அனில் கும்ப்ளேவின் சாதனையையும் தகா்த்தாா் அஸ்வின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT