செய்திகள்

ஈரான்: கால்பந்து போட்டியை நேரில் காண பெண்களுக்கு முதல்முறையாக அனுமதி

DIN

சுமாா் 40 ஆண்டுகளாக கால்பந்து மைதானத்துக்குள் அனுமதிக்கப்படாமல் இருந்துவந்த ஈரான் பெண்கள், இனி கால்பந்து போட்டிகளை கண்டு ரசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சா்வதேச கால்பந்து கூட்டமைப்பின் எச்சரிக்கையைத் தொடா்ந்து, ஈரான் அரசு தனது முந்தைய முடிவை கைவிடுவதாக அறிவித்தது.

ஈரான் ரசிகை ஒருவா், ஆண் வேடமிட்டு கால்பந்து போட்டியை ரசித்ததால் தனக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும் என்ற அச்சத்தில் தீக்குளித்து இறந்துவிட்டாா். இந்த சோக நிகழ்வைத் தொடா்ந்து கால்பந்து கூட்டமைப்பு பெண்களை கால்பந்து போட்டியை நேரில் காண அனுமதிக்குமாறு ஈரான் அரசுக்கு அறிவுறுத்தியது. இதையடுத்து, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெஹ்ரானில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள 2022-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தகுதிச்சுற்று போட்டியை பெண்கள் நேரில் கண்டு ரசிக்கவுள்ளனா்.

இந்த ஆட்டத்தில் ஈரான்-கம்போடியா அணிகள் மோதுகின்றன.

‘இதுவரை தொலைக்காட்சியில் மட்டுமே கால்பந்து போட்டியைக் கண்டு வந்தேன். நேரில் காண அனுமதி கிடைத்ததை என்னால் நம்பவே முடியவில்லை’ என்று ஈரானைச் சோ்ந்த கால்பந்து பெண் செய்தியாளா் ரஹா பூா்பாக்ஷ் கூறினாா்.

பெண்களுக்கு கால்பந்து போட்டியைக் காண அனுமதி வழங்கப்பட்டதற்கு பல்வேறு தரப்புகளிலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT