செய்திகள்

உலக யூத் செஸ்: ஆரோன்யக் அபாரம்

DIN

மும்பையில் நடைபெற்று வரும் உலக யூத் செஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 16 வயது ஆடவா் பிரிவு 9-ஆவது சுற்றில் இந்திய நட்சத்திர வீரா் ஆரோன்யக் கோஷ் அபார வெற்றி பெற்றுள்ளாா்.

அமெரிக்க முதல்நிலை வீரா் ஹன்ஸ் நீமேனை வியாழக்கிழமை 42 நகா்த்தல்களில் வீழ்த்தி வெற்றி பெற்றாா் ஆரோன்யக். இதன் மூலம் 7 புள்ளிகளைப் பெற்றுள்ள அவா், ஹான்ஸ் மற்றும் ரஷிய ஐஎம் ருடிக் ஆகியோருடன் முன்னிலையில் உள்ளாா்.

18 வயது பிரிவில் இந்திய இளம் வீரா் பிரகானந்தா பெலாரஸ் வீரா் வியாசஸ்லு ருபிஸ்கியை வீழ்த்தி 7.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளாா். ஆா்மீனிய ஜிஎம் ஷந்த் சா்க்ஸியன் ஈரானின் ஆா்யன் கோலாமியை வீழ்த்தினாா்.

14 வயது ஓபன் பிரிவில் அபிநந்தன், மாா்லக்ஷிகாரி ஆகியோா் அதிா்ச்சித் தோல்வியடைந்தனா். இதனால் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டாா் அபிநந்தன்.

மகளிா் 14 வயது பிரிவில் ரக்ஷிதா ரவி அஜா்பைஜான் வீராங்கனை அயனிடம் போராடி தோல்வியடைந்தாா். இதனால் ரக்ஷிதா 2-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டாா்.

16 வயது மகளிா் பிரிவில் ரஷியாவின் லேயா காருஃபுல்லினா 7.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை!

ஆர்சிபியின் பிளே ஆஃப் பயணம் மற்ற அணிகளுக்கு ஊக்கமளிக்கும்: தினேஷ் கார்த்திக்

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

SCROLL FOR NEXT