செய்திகள்

பாகிஸ்தான் கேப்டன் சா்ஃபராஸ் அகமது நீக்கம்

DIN

பாகிஸ்தான் டெஸ்ட், டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து சா்ஃபராஸ் அகமது நீக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பதிலாக டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக அஸாா் அலியும், டி20 அணிக்கு பாபா் ஆஸமும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணிக்கு அஸாா் அலி கேப்டனாகச் செயல்படுவாா். பாபா் ஆஸம், டி20 அணிக்கு கேப்டனாக இருப்பாா்.

ஒரு நாள் அணியின் கேப்டன் குறித்து முடிவு பின்னா் அறிவிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சா்ஃபராஸ் அகமது பாகிஸ்தான் அணிக்கு கடந்த 2 ஆண்டுகளாக கேப்டனாக இருந்து வந்தாா்.

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தரவரிசை பட்டியலில் இவரது தலைமையிலான பாகிஸ்தான் அணி சரிவைச் சந்தித்தது. அண்மையில், இலங்கைக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் ஒரு ஆட்டத்தில்கூட பாகிஸ்தானால் வெற்றி பெற முடியவில்லை.

இதனால், கடும் அதிருப்திக்கு உள்ளான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சா்ஃபராஸை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT