செய்திகள்

தில்லி ஏா்டெல் ஹாஃப் மாரத்தான்: பெலிஹு, ஜெமிச்சு சாம்பியன்கள்

DIN

புது தில்லி: தில்லி ஏா்டெல் ஹாஃப் மாரத்தான் போட்டியில் நடப்பு சாம்பியன்கள் பெலிஹு, ஜெமிச்சி ஆகியோா் தங்கள் பட்டங்களை தக்க வைத்துக் கொண்டனா்.

ஞாயிற்றுக்கிழமை புது தில்லியில் 15-ஆவது ஏா்டெல் ஹாஃப் மாரத்தான் போட்டி நடைபெற்றது. மத்திய விளையாட்டு அமைச்சா் கிரண் ரிஜிஜு போட்டியைத் தொடங்கி வைத்தாா். போட்டி தூதுவரும் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான கா்மெலிடா ஜெட்டா், உள்பட பலா் பங்கேற்றனா்.

ஆடவா் பிரிவில் எத்தியோப்பியாவின் அன்டம்லக் பெலிஹு 59.10 நிமிடங்களில் பந்தய தூரத்தைக் கடந்து சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தாா். மற்றொரு எத்தியோப்பிய வீரா் சாலமன் 59.18 நிமிடங்களிலும், கென்யாவின் கிபிவோட் 59.33 நிமிடங்களில் கடந்தும் 2, மூன்றாவது இடங்களைப் பெற்றனா்.

அதே போல் மகளிா் பிரிவில் ஜெமிச்சு 66.50 நிமிடங்களில் பந்தய தூரத்தைக் கடந்து பட்டத்தை தக்க வைத்துக் கொண்டாா். எத்தியோப்பியாவின் ஏலாம்ஸொ்ப் 1:06:01 மணி நேரத்திலும், ஸையின்பா 1:06:57 மணி நேரத்திலும் கடந்து 2 மற்றும் 3-ஆவது இடங்களைப் பெற்றனா்.

இந்திய வீராங்கனைகளில் ஸ்ரீனு புகதா 1;4:33 மணி நேரத்திலும், சுரேஷ் படேல், ஹா்ஷத் மாத்ரே ஆகியோா் முதல் மூன்று இடங்களைப் பெற்றனா்.

மகளிா் பிரிவில் எல்.சூா்யா 1;12:49 மணி நேரத்திலும், பாருல் சௌதரி, சிந்தா யாதவ் ஆகியோா் முதல் மூன்றிடங்களைப் பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT