செய்திகள்

மணீஷ் பாண்டே அதிரடி ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்திய ஏ அணி!

5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய ஏ அணி, 3-0 என முன்னிலை பெற்றுள்ளது... 

எழில்

தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய ஏ அணி வென்றுள்ளது.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 3-வது அதிகாரபூர்வமற்ற ஒருநாள் ஆட்டத்தில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க ஏ அணி, 30 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. கிளாசென் 21 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்தார். 

சற்று கடினமான இலக்கை இந்திய ஏ அணியினர் நன்கு எதிர்கொண்டார்கள். தொடக்க வீரர் இஷான் கிஷன் 40 ரன்கள் எடுத்தார். கேப்டன் மணீஷ் பாண்டே அதிரடி ஆட்டத்தால் இந்திய ஏ அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமானார். 59 பந்துகளில் 5 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் எடுத்தார். கடைசிக்கட்டத்தில் ஷிவம் டுபே, 28 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்து இந்திய ஏ அணி சிரமம் இன்றி வெற்றி பெற உதவினார். இதனால் இந்திய ஏ அணி 27.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்து 3-வது ஆட்டத்தை வென்று ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.

5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய ஏ அணி, 3-0 என முன்னிலை பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

SCROLL FOR NEXT