செய்திகள்

காயம் காரணமாக யு.எஸ். ஓபன் போட்டியிலிருந்து வெளியேறினார் ஜோகோவிச்: காலிறுதிக்கு முன்னேறிய வாவ்ரிங்கா!

வாவ்ரிங்கா கடுமையான போட்டி மனப்பான்மையுடன் விளையாடுவார் என அனைவருக்கும் தெரிந்தாலும்...

எழில்

ஸ்டான் வாவ்ரிங்காவிடம் தோல்வியடைந்த ஜோகோவிச் என்கிற தலைப்புடன் தான் இந்தச் செய்தியை நீங்கள் படித்திருக்கவேண்டும். அதற்குரிய சூழலை வாவ்ரிங்கா உருவாக்கியும் காயம் காரணமாக ஆட்டத்தின் இறுதியில் வெளியேறிவிட்டார் வாவ்ரிங்கா. இதனால் ஜோகோவிச்சை முழுமையாகத் தோற்கடித்த திருப்தி வாவ்ரிங்காவுக்கு ஏற்படாவிட்டாலும் வெற்றி பெற்று காலிறுதிக்கு அவர் முன்னேறியுள்ளார்.

யுஎஸ் ஓபன் போட்டியின் நான்காவது சுற்றில் ஜோகோவிச்சும் டேன் வாவ்ரிங்காவும் மோதினார்கள். இரு முன்னணி வீரர்கள் மோதும் ஆட்டம் என்பதால் டென்னிஸ் ரசிகர்களின் ஆவலுடன் இந்த ஆட்டத்தின் முடிவை எதிர்பார்த்தார்கள். 

வாவ்ரிங்கா கடுமையான போட்டி மனப்பான்மையுடன் விளையாடுவார் என அனைவருக்கும் தெரிந்தாலும் ஜோகோவிச்சின் வெற்றியையே டென்னிஸ் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். எனினும் வாவ்ரிங்காவின் ஆட்டம் ரசிகர்களுக்கு வேறுவிதமான பதிலைத் தந்தது.

6-4, 7-5, 2-1 என ஆச்சர்யப்படும் விதத்தில் விளையாடி வெற்றியின் அருகில் சென்றார் வாவ்ரிங்கா. இந்தக் கட்டத்தில் தோள்பட்டையில் ஏற்பட்ட வலி காரணமாகப் போட்டியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார் ஜோகோவிச். இதன் அடிப்படையில் 4-வது சுற்றில் வென்ற வாவ்ரிங்கா, காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். 

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் காயம் காரணமாக ஜோகோவிச் பாதியில் வெளியேறுவது இது ஆறாவது தடவை. கடைசியாக 2017-ல், விம்பிள்டன் காலிறுதியில் இதுபோன்று காயம் காரணமாக வெளியேறினார். அதற்கு முன்பு, 2009-ல் தான் இதுபோன்ற ஒரு நிலைமை அவருக்கு ஏற்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல்-ஹமாஸ் போா் நிறுத்தம்: எகிப்தில் இன்று சா்வதேச மாநாடு! டிரம்ப் உள்பட உலகத் தலைவா்கள் பங்கேற்பு!

நாசரேத்தில் ஆம்னி பேருந்து மோதியதில் சாலையில் சரிந்த மரம்: போக்குவரத்து பாதிப்பு

மருமகன் வெட்டிக் கொலை: மாமனாா் மீது வழக்கு

பிகாா் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி! காங்கிரஸ் தலைவா்களைச் சந்திக்க லாலு, தேஜஸ்வி தில்லி பயணம்!

ரூ.7.5 லட்சம் விதைகள் விற்க தடை: 5 கடைகளின் உரிமம் ரத்து

SCROLL FOR NEXT