செய்திகள்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்று: காயம் காரணமாக தீபக் புனியா விலகல்

DIN


உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் இந்திய வீரர் தீபக் புனியா காயம் காரணமாக பாதியில் விலகி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். 

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் கஜகஸ்தானில் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் சுவிட்சர்லாந்து வீரர் ஸ்டீஃபன் ரெய்ச்முத்தை 8-2 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தீபக் புனியா இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் தீபக் புனியா 86 கிலோ எடைப் பிரிவில் ஈரான் வீரர் ஹசன் யஸ்தானியை எதிர்கொண்டார். இதன் முதல் சுற்றில் தீபக் புனியாவின் கால் மற்றும் கண்களில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், அவர் இறுதிச்சுற்றில் இருந்து விலகினார். 

இதன்மூலம், உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தீபக் புனியா வெள்ளிப்பதக்கத்தை வென்றார். 

முன்னதாக, உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் தீபக் புனியா ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT