செய்திகள்

கொரிய ஓபன்: சிந்து, சாய்னா பங்கேற்பு

DIN


கொரிய ஓபன் பிடபிள்யுஎப் சூப்பர் 500 பாட்மிண்டன் போட்டியில் உலக சாம்பியன் பி.வி.சிந்து, சாய்னா நெவால், சாய் பிரணீத், பாருபல்லி காஷ்யப் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
உலக சாம்பியன் பட்டம் வென்ற பின் சிந்து, சீன ஓபன் போட்டியில் கலந்து கொண்டார். ஆனால் துரதிருஷ்டவசமாக தாய்லாந்தின் போர்னபவியிடம் இரண்டாவது சுற்றிலேயே தோல்வியுற்று வெளியேறினார். 26 வயதான சிந்து கடந்த 2017-இல் கொரிய ஓபன் பட்டத்தை கைப்பற்றி இருந்தார். இப்போட்டி முதல் சுற்றில் அமெரிக்காவின் பெய்வென் ஸாங்குடன் மோதுகிறார் அவர்.
மற்றொரு நட்சத்திர வீராங்கனையான சாய்னா நெவால் முதல் சுற்றில் கொரிய வீராங்கனை கிம் ஹியுனை எதிர்கொள்கிறார்.
ஆடவர் பிரிவில் உலக சாம்பியன் போட்டியில் வெண்கலம் வென்ற சாய் பிரணீத் டென்மார்க்கின் ஆன்டர்ஸ் அன்டன்சனை எதிர்கொள்கிறார். மற்றொரு வீரர் பாருபல்லி காஷ்யப், இரட்டையர் பிரிவில் சத்விக்=சிராக்ஷெட்டி, மனு அட்ரி-சுமித் ரெட்டியும் கலந்து கொள்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: ராகுல்

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

SCROLL FOR NEXT