செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி!

ஜிம்பாப்வேவுக்குப் பதிலாக இலங்கை அணி வரும் ஜனவரி மாதம் இந்தியாவுக்குச் சுற்றுபயணம் செய்து மூன்று டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது...

எழில்

ஜிம்பாப்வேவுக்குப் பதிலாக இலங்கை அணி வரும் ஜனவரி மாதம் இந்தியாவுக்குச் சுற்றுபயணம் செய்து மூன்று டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது.

அரசின் தலையீடு உள்ளதால், கடந்த ஜூலை மாதம் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு இடைக்காலத் தடை விதித்தது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி). இதையடுத்து ஜனவரி மாதம் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 ஆட்டங்களில் ஜிம்பாப்வே அணி விளையாடுவதாக இருந்த திட்டம் ரத்தாகியுள்ளது. ஜிம்பாப்வேவுக்குப் பதிலாக இலங்கை அணி, இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாக பிசிசிசி இன்று அறிவித்துள்ளது. 

ஜனவரி 5 முதல் 10 வரை நடைபெறவுள்ள 3 டி20 ஆட்டங்களில் இலங்கை அணி விளையாடுகிறது. இந்த டி20 தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா - இலங்கை டி20 தொடர்

முதல் டி20: ஜனவரி 5 (குவாஹாட்டி)
2-வது டி20: ஜனவரி 7 (இந்தூர்)
3-வது டி20: ஜனவரி 10 (புணே)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!

SCROLL FOR NEXT