செய்திகள்

மீண்டும் ஜொலித்தார் ஹர்மன்பிரீத்: ஸ்பெயினை வீழ்த்தியது இந்திய ஆடவர் ஹாக்கி

DIN


ஸ்பெயினுக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

பெல்ஜியத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஹாக்கி அணி பெல்ஜியத்துக்கு எதிராக 3 ஆட்டங்களிலும், ஸ்பெயினுக்கு எதிராக 2 ஆட்டங்களிலும் விளையாடுகிறது. பெல்ஜியத்துக்கு எதிரான முதல் ஆட்டம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி நேற்று ஸ்பெயினை எதிர்கொண்டது. இதில், இந்திய அணி 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், மூன்றாவது ஆட்டத்தில் இந்திய அணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் ஸ்பெயினை எதிர்கொண்டது. இதில், இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. போட்டி தொடங்கிய 3-வது நிமிடத்திலேயே ஸ்பெயின் முதல் கோலை அடித்து கோல் கணக்கை தொடங்கியது. இந்த கோல் மூலம் ஸ்பெயின் அணி இந்தியாவுக்கு அழுத்தம் தந்தது. 

இருந்தபோதிலும் முதல் 2 ஆட்டங்களில் வெற்றிகண்ட நம்பிக்கையுடன் இந்திய அணி நேர்மறையாக எதிர்கொண்டது. இந்தியாவின் ஆகாஷ்தீப் போட்டியின் 5-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். 

இதன்பிறகு, நம்பிக்கையுடன் தென்பட்ட இந்திய அணி போட்டியின் 20-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து 2-1 என முன்னிலைப் பெற்றது. இந்த கோலை எஸ்வி சுனில் அடித்தார். எனினும், ஸ்பெயின் அணி விடாது முயற்சித்து கோல் அடிக்கும் வாய்ப்புகளை உருவாக்கியது. ஆனால், அவை கோலாக மாறவில்லை. இதன்மூலம், முதல் பாதி ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகித்தது.

2-வது பாதி ஆட்டத்தை இந்திய அணி சிறப்பாக தொடங்கி கோல் அடிப்பதற்கான சூழலை உருவாக்கியது. இதற்குப் பலனாக 35-வது நிமிடத்தில் ராமன்தீப் சிங் இந்தியாவின் 3-வது கோலை அடித்தார். அடுத்த 6 நிமிடங்களில் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை ஹர்மன்பிரீத் சிங் கோலாக மாற்றி 4-1 என முன்னிலைப் பெறச் செய்தார். 

இந்திய அணி அடித்த அடுத்தடுத்த கோல்களால், ஸ்பெயின் அணி அந்த நெருக்கடியில் இருந்து மீளவில்லை. இதனால், சிறப்பாக விளையாடி வந்த இந்திய அணி 51-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோலை அடித்தது. இந்த கோலையும் ஹர்மன்பிரீத் சிங்தான் அடித்தார். 

இதன்மூலம், ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் மீண்டும் அசத்தலான வெற்றியைப் பெற்றது. 

இந்திய அணி தனது அடுத்த போட்டியில் வரும் செவ்வாய்கிழமை உலகின் 2-ஆம் நிலை அணியான பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது.

எதிர்வரும் போட்டிகள் அட்டவணை:

பெல்ஜியம் - இந்தியா (அக்டோபர் 1)

பெல்ஜியம் -  இந்தியா (அக்டோபர் 3)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT