செய்திகள்

இந்திய அணிக்கு மீண்டும் தேர்வாக வேண்டும்: வேகப்பந்துவீச்சாளர் உனாட்கட்

இந்திய அணியின் பந்துவீச்சு பலமாக உள்ளது. ஆகவே போட்டியும் கடுமையாக உள்ளது.

DIN

2010-ல் 19 வயதில் இந்திய அணிக்காக டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடினார் ஜெயதேவ் உனாட்கட். அதன்பிறகு 7 ஒருநாள், 10 டி20 ஆட்டங்களில் மட்டுமே விளையாடிய உனாட்கட் கடந்த இரண்டு வருடங்களாக இந்திய அணியில் இடம்பெறவில்லை.

ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

சிவப்புப் பந்தில் விளையாடுவது மிகவும் ஆர்வமூட்டுகிறது. முதல் டெஸ்டுக்குப் பிறகு இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதை நினைக்காத நாளில்லை. அதனால் இந்திய டெஸ்ட் அணியில் நான் இடம்பெற வேண்டும். ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சு பலமாக உள்ளது. ஆகவே போட்டியும் கடுமையாக உள்ளது. மேலும் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் நான் நன்கு விளையாடவேண்டும் என்பதே விருப்பம். இந்திய அணியில் விரைவில் இடம்பிடித்து திறமையை வெளிப்படுத்த வேண்டும். அதற்கு நான் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ரஞ்சி கோப்பைப் போட்டியில் 67 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் 28 வயது உனாட்கட். அவர் தலைமை வகித்த செளராஷ்டிரம் அணி ரஞ்சி கோப்பையை வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

SCROLL FOR NEXT