செய்திகள்

இலங்கை டி20 லீக் போட்டி ஒத்திவைப்பு

DIN

ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 20 வரை இலங்கை பிரீமியர் லீக் டி20 போட்டி நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில் கரோனா தொடர்பான நிர்வாகக் காரணங்களால் இப்போட்டி தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கை டி20 லீக் போட்டிக்காக நான்கு மைதானங்களில் 23 லீக் ஆட்டங்கள் நடைபெற இருந்தன. கொழும்பு, கண்டி, கேலே, டம்புல்லா, யாழ்ப்பாணம் என ஐந்து அணிகள் இப்போட்டியில் பங்குபெற இருந்தன. இப்போட்டியில் பங்கேற்க 70 சர்வதேச வீரர்களும் 10 பிரபல பயிற்சியாளர்களும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. 

ஒவ்வொரு அணியும் ஆறு வெளிநாட்டு வீரர்களைத் தேர்வு செய்துகொள்ளலாம். ஆட்டத்தின்போது நான்கு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே ஓர் அணியில் அனுமதிக்கப்படுவார்கள் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இந்நிலையில் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு வீரர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என இலங்கை அரசு கட்டளையிட்டதால் வேறுவழியில்லாமல் இலங்கை பிரீமியர் லீக் டி20 போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் முடிவடைந்த பிறகு நவம்பரில் இப்போட்டி நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

SCROLL FOR NEXT