செய்திகள்

தோனி ஓய்வு: முதலும் முடிவும் ரன் அவுட்டில்..

DIN


தோனி முதல் சர்வதேச ஆட்டத்திலும் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார், கடைசி சர்வதேச ஆட்டத்திலும் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்திருக்கிறார்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் கடைசியாக கடந்தாண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் விளையாடினார். அதன்பிறகு, சர்வதேச கிரிக்கெட்டில் அவர் தலைகாட்டவில்லை.

2004-இல் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தின்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் தோனி. அந்த ஆட்டத்தில் 7-வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய தோனி முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காத நிலையில் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

கடைசியாக விளையாடிய சர்வதேச ஆட்டத்திலும் நியூஸிலாந்துக்கு எதிராக 49 ரன்கள் எடுத்திருந்த அவர், 2-வது ரன் எடுக்க முயன்றபோது ரன் அவுட் ஆனார்.

இவ்வாறு தோனியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்கை ரன் அவுட்டில் தொடங்கி ரன் அவுட்டிலேயே நிறைவடைந்துள்ளது.

ஒருநாள்:

ஆட்டங்கள்: 350

ரன்கள்: 10,773

சதம் | அரைசதம்: 10 | 73

பேட்டிங் சராசரி: 50.57

டி20:

ஆட்டங்கள்: 98

ரன்கள்: 1,617

சதம் | அரைசதம்: 0 | 2

பேட்டிங் சராசரி: 37.60

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT