முகப்பு
செய்திகள்

ஹர்பஜன் சிங் இல்லாமல் துபை செல்லும் சிஎஸ்கே அணி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக நாளை துபை செல்லவுள்ளார்கள்.

செய்திகள்

ஹர்பஜன் சிங் இல்லாமல் துபை செல்லும் சிஎஸ்கே அணி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக நாளை துபை செல்லவுள்ளார்கள்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:09 PM
பகிர்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக நாளை துபை செல்லவுள்ளார்கள்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 19 (சனிக்கிழமை) அன்று தொடங்கும் ஐபிஎல் போட்டி நவம்பர் 10 (செவ்வாய்) அன்று முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜாவில் 53 நாள்களுக்கு 60 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதற்காக 8 ஐபிஎல் அணி வீரர்களும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

செப்டம்பர் 19 அன்று ஐபிஎல் போட்டி தொடங்குவதால் இன்று முதல் ஒவ்வொரு ஐபிஎல் அணியும் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்ல ஆரம்பித்துள்ளன. இன்று, பஞ்சாப் அணி வீரர்கள் துபைக்குச் சென்றுள்ளார்கள். 

ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக தோனி, ரெய்னா உள்ளிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். சிஎஸ்கே வீரர்கள் சென்னையில் பயிற்சியில் ஈடுபட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் சென்னையிலிருந்து துபைக்கு நாளை பயணிக்கவுள்ளார்கள். 

இந்நிலையில் நாளை துபை செல்லும் சிஎஸ்கே அணியினருடன் ஹர்பஜன் சிங் பயணிக்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஹர்பஜன் சிங்கின் தாயாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் ஒரு வாரம் அல்லது 10 நாள்கள் கழித்து துபைக்கு ஹர்பஜன் செல்லவுள்ளார். 

2018-ல் ரூ. 2 கோடிக்கு ஹர்பஜன் சிங்கை சிஎஸ்கே அணி தேர்வு செய்தது. கடந்த வருட ஐபிஎல் போட்டியில் 11 ஆட்டங்களில் 16 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். 

முழு கட்டுரையைப் படிக்க →