முகப்பு
செய்திகள்

ஐபிஎல் போட்டியில் இருந்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வீரர் விலகல்!

ஐபிஎல் போட்டியில் இருந்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ஹாரி கர்னி விலகியுள்ளார்.

செய்திகள்

ஐபிஎல் போட்டியில் இருந்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வீரர் விலகல்!

ஐபிஎல் போட்டியில் இருந்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ஹாரி கர்னி விலகியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
பகிர்:

ஐபிஎல் போட்டியில் இருந்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ஹாரி கர்னி விலகியுள்ளார்.

கரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ள அனைத்து அணி வீரர்களும் துபை மற்றும் அபுதாபிக்குச் சென்று சேர்ந்துள்ளார்கள். இதனால் அடுத்த ஏழு நாள்களுக்கு நட்சத்திர விடுதியில் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். 

இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வீரர் ஹாரி கர்னி விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார். இதனால் ஐபிஎல் மற்றும் டி20 பிளாஸ்ட் ஆகிய இரு போட்டிகளிலிருந்தும் விலகியுள்ளார். இதனால் ஐக்கிய அரபு அமீரகத்துக்குத் தான் செல்லப் போவதில்லை என்றும் கூறியுள்ளார். 

கடந்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாடிய இங்கிலாந்தைச் சேர்ந்த 33 வயது ஹாரி கர்னி, 8 ஆட்டங்களில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

முழு கட்டுரையைப் படிக்க →