செய்திகள்

டி20 தொடரிலிருந்து ஜடேஜா விலகல்: இந்திய டி20 அணியில் ஷர்துல் தாக்குர் சேர்ப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஆல்ரவுண்டர் ஜடேஜா விலகியுள்ளார்.

DIN

காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஆல்ரவுண்டர் ஜடேஜா விலகியுள்ளார். இதையடுத்து வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்குர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கான்பெராவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் அடிக்க, அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா நிா்ணயிக்கப்பட்ட ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களே அடித்து வீழ்ந்தது.

இந்திய இன்னிங்ஸில் முக்கியமான தருணத்தில் அதிரடியாக ஆடி ஸ்கோரை உயா்த்திய ஜடேஜா, கடைசி நேரத்தில் காயமடைந்தாா். அவருக்கான மாற்று ஆட்டக்காரராக இணைந்த யுவேந்திர சஹால் ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் முக்கியமான வீரா்களையும் சோ்த்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். இதனால் ஆட்ட நாயகன் விருதும் அவருக்குக் கிடைத்தது.

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் காயமடைந்த ஜடேஜா, டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். இதனால் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்குர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

3-வது ஒருநாள் ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார் ஷர்துல் தாக்குர். இதையடுத்து மீதமுள்ள இரு டி20 ஆட்டங்களில் அவர் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடுபட்டவர்களுக்கு டிசம்பர் முதல் மகளிர் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

கடல் கடந்து வந்து காதலரை கரம் பிடித்த ஜெர்மன் பெண்! தமிழ் முறைப்படி திருமணம்!!

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

SCROLL FOR NEXT