செய்திகள்

நான் புதிய இந்தியா: விராட் கோலி

என்னுடைய ஆளுமையும் நடவடிக்கைகளும் புதிய இந்தியாவை வெளிப்படுத்துகின்றன...

DIN

என்னுடைய ஆளுமை புதிய இந்தியாவை வெளிப்படுத்துவதாக இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது.

முதல் டெஸ்ட் நாளை முதல் தொடங்குகிறது. பகலிரவு டெஸ்டாக நடைபெறுகிறது.

இந்த ஆட்டம் பற்றி இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

எனக்கும் ரஹானேவுக்கும் இடையே நல்ல புரிதல் உள்ளது. ஆடுகளத்தில் அமைந்த எங்கள் கூட்டணியும் ஒருவர் மீது இன்னொருவருக்கு உள்ள நம்பிக்கையின் வெளிப்பாடுதான். பயிற்சி ஆட்டங்களில் கேப்டனாக நன்குப் பணியாற்றியுள்ளார் ரஹானே. ஓர் அணியாக என்ன செய்யவேண்டும் என்பதை அவர் அறிவார். எனவே நான் இல்லாத சமயத்தில் அணியை அவர் நன்கு வழிநடத்துவார். 

நான் நானாக உள்ளேன். என்னுடைய ஆளுமையும் நடவடிக்கைகளும் புதிய இந்தியாவை வெளிப்படுத்துகின்றன. நம்பிக்கையுடன் சவால்களை நாங்கள் எதிர்கொள்கிறோம். வெளியே என்ன சொன்னாலும் திறமையை நன்கு வெளிப்படுத்துவதில்தான் எங்கள் கவனம் இருக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆற்காடு அருகே ஆம்னி வேன் மோதி கூலி தொழிலாளி பலி

முதல்முறையாக இணையும் விஜய் தேவரகொண்டா - கீர்த்தி சுரேஷ்..! பூஜை புகைப்படங்கள்!

தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம்: காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை

2 நாள்களில் ரூ.10 உயர்ந்த வெள்ளி! தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

புரட்டாசி சனிக்கிழமை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

SCROLL FOR NEXT